கண் கண்ணாடி மிக அவசியமா?
கண் கண்ணாடி மிக அவசியமா ? உணவுக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து மிக்க உணவு, உடற்பயிற்சிகள் கண் பயிற்சிகள் கண்களுக்கு மிக மிக இன்றியமையாததாகும். ஆனால், அதே நேரத்தில் இவைகள் பார்வைத் திறனை மேம்படுத்தினாலும், பார்வைக் குறைபாடுகளை சரிசெய்யும் என நினைத்து கண்ணாடி அணிவதை தவிர்ப்பது தவறாகும் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும். கண் கண்ணாடியை தவிர்ப்பது எதனால்? தனக்கு பார்வைத் திறன் குறைவு என்பது மற்றவர்களுக்கு தெரிந்துவிடும், கண்ணாடி அணிவதால் வயதான தோற்றம் ஏற்படும், கண்ணாடி அணிவதால் முகத்தில் தழும்புகள் ஏற்படும்.... என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இவையாவும் அவரவர்களின் மனநிலையை பொருத்ததாகும். ஒரு சிலர், கண்ணாடி போட்டால் பழக்கமாகி விடும், கண்ணாடியின் திறன் , பருமன் ஏறிக்கொண்டே வரும் , கண்ணாடி இல்லாத தருணங்களில் சிரமப்பட வேண்டி வரும் என நினைக்கலாம். மேலும் சிலர், கண்ணாடி தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளலாம். இது ஒரு சில காரணங்களுக்கு சரியானதுதான், மறதியாய் வைத்து விட்டேன், கண்ணாடி வாங்க பணம் இல்லை கண் பரிசோதணை செய்ய நேரம் இல்லை...