கண் கணினி

கண் கணினி!


அறிவு என்பது பல வகையாகும். அதில் காட்சி புலனறிவு, கற்பனை அறிவு, வடிவமைப்பு அறிவு என்பதெல்லாம் கணினித் தொழிலுக்கு பயன்படும் வகைகள். ஐம்புலன் அறிவில் கண் பார்வை புலனறிவே கணினித் தொழிலுக்கு பிரதானம். கணினி இல்லாமல் இன்றைய உலகை நினைத்துப் பார்க்கவே முடியாது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் அனைத்து தொழில்முனைவோர்கள், வியாபாரிகள், விற்பனையாளர்கள், தகவல் பரிமாற்றத் தேவைகள், பண பரிவர்த்தனைகள் என அத்தனை தேவைகளுக்கும் கணினி பயன்பாடு மிகமிக அவசியமான ஒன்று. அதே நேரத்தில் கணினி பயன்படுத்தும்போது நமது கண்களில் ஏற்படும் பிரச்னைகள் என்ன? அதிலிருந்து கண்களை பாதுகாப்பது எப்படி என காண்போம்... 

தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நல இயக்ககம், கணினி தொழில் செய்பவர்கள், கணினி பயன்பாடு உள்ளவர்கள் கண்களை முறையாக கண் மருத்துவர்கள் மற்றும் கண் பார்வை பரிசோதனை நிபுணர்களிடம் பரிசோதித்து அவர்கள் ஆலோசனைப்படி கண்களை கணினியால் வரும் சில பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது. 

கணினி பயன்படுத்துவோர், கணினி தொழில்முறையில் பயன்படுத்துவோர், கண்களை முழுமையாக பரிசோதித்து பார்வைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, ஒருதளப்பார்வை குறைபாடுகளை முறையே பரிசோதித்து தகுந்த கண் கண்ணாடிகள் அணிவதன் மூலம் கணினியின் திரையும், திரையின் எழுத்துக்கள், வண்ணங்கள், படங்கள் அனைத்தும் மிகத் துல்லியமாக பார்க்க முடியும் இதனால் கண்கள்  சிரமம் இல்லாத தன்மை பெறும். மேலும் கண்ணாடியில் HMC, ARC  எனும் பாதுகாப்பு அடுக்கு போடுவதன் மூலம், வெகுநேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்தாலும் கண்கள் தளர்ச்சி அடைவதில்லை. கண் பார்வைக் குறைபாடு இல்லாதவர்கள் கூட திறனில்லா கண்ணாடியில் இவ்வகை பாதுகாப்புஅடுக்கு (ARC) பிரதிபலிக்கும் கண்ணாடி அணிவதன் மூலம் கணினியால் வெளியாகும் மிகை கதிர்களை பிரதிபலித்து கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். 

         கணினி பயன்படுத்தும் அறையில் திரை மீது அதிகம் ஒளி படாதவாறு அறையின் விளக்குகளை பொருத்த வேண்டும். மேலும் அறையின் சுவர்கள் ஒளியை பிரதிபலிக்கும் வகையில் வெளிறிய வண்ணத்தில் இல்லாமல் சற்றே அடர்த்தியான வண்ணத்திலும் ஒளி பிரதிபலிக்காத வகையிலும் இருத்தல் நல்லது அதேபோன்று அறையின் சாளரம் வழியோ ஒளிக்கற்றை அல்லது வெளிச்சம் கணினியின் திரை மீது படுவதால் ஏற்படும் மிகைப்படி கிளேர் நமக்கு , நம் கண்களுக்கு ஏற்படுத்தும் சிரமத்தை குறைக்க திரைச்சீலை பொருத்தி கட்டுப்படுத்தலாம் . 

கணினியின் திரைப்பகுதி CRT எனும் பழைய முறையில் உள்ளவைகளை அகற்றி LCD எனும் புதிய வகை திரைப்பகுதி பயன்படுத்துவதன் மூலம் வரிவரியாய் தெரியும் படங்களை மிகத்துல்லியமாக பார்ப்பதன் மூலம் கண்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கலாம் மேலும் திரைப்பகுதியை நாம் எழுத்துக்கள், அதன் அளவு, வடிவம் என நமக்கு தேவைக்கு ஏற்ப சரி செய்து கொள்ள வேண்டும். அதாவது வண்ணம், 'கான்ட்ராஸ்ட்', பின்னணி வெளிச்சம் இவைகளையும் சரிசெய்து கொள்ள வேண்டும் 

கணினியில் வேலை செய்யும்போது பலர் கண்களை இமைப்பதே இல்லை. இதனால் கண்கள் உலர் தன்மை அடைந்து கண் எரிச்சல், தூக்கமின்மை, கண் சோர்வு முதலானவை ஏற்படுகிறது. குளிர்சாதன அறையாக இருந்தாலும் கண் உலர் தன்மை ஏற்படலாம். இவ்வாறு இருந்தால் செயற்கை கண் நீர் மருந்தாக கொடுத்து கண்ணின் உலர் தன்மையை ஈரப்பதம் செய்து மேற்படி சிரமங்கள் ஏற்படாதவாறு கண்களை பாதுகாக்கலாம். ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களை 20 வினாடிகள் இமைப்பதன் மூலம் கண் உலர் தன்மையை தவிர்க்கலாம். இதனால் கணினியில் இன்னும் சற்று கூடுதல் நேரம் வேலை செய்தாலும் கண்கள் சோர்வடைவதை தவிர்க்கலாம். 

கணினியில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்யும் போது 30 நிமிடம் அதிகபட்சம் 60 நிமிடத்திற்கு ஒரு முறையேனும் கண்களை தூரப்பார்வை பார்க்க சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை அனுமதிக்கவேண்டும். இத்தருணங்களில் தோள்பட்டை முதுகு தண்டுவட தளர்ச்சி பயிற்சிகளை ஓரிரு நிமிடங்கள் செய்யலாம். 

கணினியின் திரையும் நமது கண்களுக்கு உண்டான தூரம் 50 சென்டிமீட்டர் அளவுக்கு நாம் இடைவெளி விடவேண்டும். மிகமிக அருகில் அமர்ந்து வேலை செய்தால் நலம் பயக்காது. அதேபோன்று கணினியின் திரையின் மையம் நமது கண்களின் நேரடி கோணத்தில் அமைக்காது இருபது டிகிரி கோணம் அளவிற்காவது சற்று கீழே சாய்வாய் இருந்தால் நலம் பயக்கும். 

நாற்பது வயது நெருங்கியவர்கள் மற்றும் கடந்தவர்கள் கண்களை முறையே பரிசோதித்து தூரப்பார்வையும், அருகில் உள்ள புத்தகங்களை படிக்கும் அளவிற்கு பார்வையும் அனைத்தும் பொருந்தக்கூடிய வகையில் பன்முக குவியத்திறன் கொண்ட புரோகிரஸிவ் எனும் விழிவில்லை கண் கண்ணாடிகளை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்கிறோம். அந்த பன்முக குவியத்திறன் கொண்ட புரோகிரஸிவ் கண்ணாடிகள் பல்வேறு வகைகளில், பல்வேறு பயன்பாடுகளில், பல்வேறு விலைகளில் கிடைத்தாலும் கண்களின் இரு விழிகளின் மையப் பகுதிகளை அளவிட்டு, கண்ணாடியின் மையப் பகுதியும், பார்வை மையக் கோடு பகுதியும் பொருந்துமாறு மிகத் துல்லியமாக செய்தால்தான் பயன் மிகமிக அதிகம் கிடைக்கும் கண்ணின் சிரமங்கள் குறையும். 

இறுதியாக குறைவான நேரத்தில் மிக அதிக வேலைகளை மிகத் துல்லியமாக முடித்து அதிகப்படியான பலன்களைப் பெற கண்களை முறையே பரிசோதித்து, தகுந்த கண் கண்ணாடிகளை, தகுந்த பாதுகாப்பு தன்மைகளுடன், சரியான விலையில், தகுந்த அளவுகளை எடுத்து தரமான முறையில் செய்து பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி திறன், படைப்புத் திறன், வேலை நேரம் குறைத்து கண்களை சிரமமில்லாமல் காத்துக்கொள்ள வேண்டும். 


 தகவல் தொடர்புக்கு : 9381051009

Comments

Popular posts from this blog

வெள்ளெழுத்து ஏன்?

கண் பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?

வியப்பூட்டும் லேசர் சிகிச்சை