கான்டெக்ட் லென்ஸ் பயன்கள்!!

கான்டெக்ட் லென்ஸ் பயன்கள் விரிவான பார்வை!

கண்ணாடியின் மாற்றாக விழி ஒட்டுவில்லை (கான்டெக்ட் லென்ஸ்) பற்றிய பயன்களை காண்போம் .. 

கண்ணாடி அணிய பிடிக்கவில்லை... வயதான தோற்றத்தை தருகிறது .. முகத்தில் தழும்பு ஏற்படுகிறது.. எனது அழகு குறைகிறது.. கண்ணாடி அணிந்தும் பார்வைக்குறை உள்ளது.. கண்ணாடிக்கு மாற்று உண்டா என ஏங்குபவர் பலருண்டு. உண்டு! ஆம்! அது விழி ஒட்டுவில்லை எனும் கான்டெக்ட் லென்ஸ். ஆரம்ப கால கட்டத்தில் விழி ஒட்டுவில்லை ஆராய்ச்சி பல சவால்களை கொண்டதாகவும், மக்களிடையே கொண்டு செல்வதில் மற்றும் பயன்படுத்துவதில் பல நிறைகுறைகளை கொண்டதாகவும் இருந்தது. 

காலத்தின் மாற்றம், விஞ்ஞானத்தின் ஏற்றம், மக்களின் எதிர்பார்ப்பு, விழி ஒட்டு வில்லை உற்பத்தியாளர்களின் உலகளாவிய போட்டி, ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம் விழி ஒட்டுவில்லை வகைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. 
தடிமனான, மிகப்பெரிய அமைப்புடன் போடுவதற்கும், போடப் பயிற்சி கொடுப்பதற்கும் சிக்கலான ஸ்கிளிரல் விழி ஒட்டுவில்லை வகைதான் ஆரம்பத்தில் இருந்தது. மருத்துவர்களே இவ்வகைகளை பரிந்துரை செய்வதில் தயக்கம் காட்டினர். ஆனாலும் சிலவகைள ப புணர்வு 1-7 குறைபாடு உள்ளவர்களுக்கு அதாவது கண்ணாடி போட வழியில்லாதவர்களுக்கு மாற்று ஏற்பாடாக மலை இதைப் பரிந்துரை செய்யும் நிலை இருந்தது. இதன் - அடுத்த கட்டமாக வன்மை ஹார்டு ) தன்மை விழி ஒட்டுவில்லையும், பகுதி மென்மை தன்மை விழி - ஒட்டுவில்லையும் பயன்பாட்டிற்கு வந்தன
. இவைகளும் .. முறையே மூன்று மணிநேரம் மற்றும் எட்டு மணிநேரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டன. அதற்கு மேல் ) பயன்படுத்த முடியாது. அப்படியே பயன்படுத்தினால் 'கார்னியல் அல்சர்' எனச் சொல்லக் கூடிய விழி வெண்படல புண் ஏற்பட வாய்ப்புகள் இருந்தன. 

மிக அதிகமான திறன் கொண்ட கிட்டப்பார்வை குறை கொண்டவர்களுக்கும் இரு கண்களில் ஒவ்வொரு கண்ணிற்கும் திறன் வித்தியாசம் இரண்டு திறனுக்கு மேல் இருந்தால் (அனைசோ மெட்ரோபியா) அவர்களுக்கும் (இதுபற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்) விழி ஒட்டுவில்லையே பரிந்துரை செய்யப்பட்டது. 
சிலருக்கு விழி வெண்படல நோய் இருக்கும்போது அதைக் குணப்படுத்த ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு கண்ணில் கண் மருந்து விட வேண்டும். அவ்வாறு உள்ளவர்களுக்கு தெராப்டிக் விழி ஒட்டுவில்லை பரிந்துரை செய்யப்பட்டது. இதன்படி கண்ணில் விழி ஒட்டு வில்லை அணிந்த பின்னர் சொட்டு மருந்து கண்ணில் போட்டால், அவ்விழி ஒட்டுவில்லை அம்மருந்தினை உட்கிரகித்து தன்னகத்தே வைத்திருந்து தொடர்ச்சியாக கண்ணின் விழி வெண்படல நோயினை குணப்படுத்த, மருந்தினை தொடர்ச்சியாக கொடுத்து உதவியாக இருந்ததால் இது கண் மருத்துவ பிரிவில் கார்னியா எனும் உட்பிரிவில் மிகுந்த பயன்பாட்டில் இருந்தது. 
இதேபோல் சிலருக்கு கருவிழி வெண்படலம் கார்னியா மிகமிக மெல்லியதாக இருந்து கூம்பு வடிவமாய் அழுத்தப்பட்டு வெளித்தள்ளும் நிலையை, 'கோனிகல் கார்னியா' அல்லது 'கெரட்டோ கோனாஸ்' என்பர். இதற்கு வன்மை மற்றும் பகுதி மென்மை விழி ஒட்டுவில்லை கொடுத்து அதன் பாதிப்பை குறைக்கும் முயற்சியில் பயன்படும் மேலும் இவ்வகை பிரச்னைகள் கொண்டவர்களுக்கு உள்ள சாய்வு அச்சு குவிய குறைபாட்டினை ஓரளவு சரிசெய்து பார்வை மேம்பட வழி செய்யும். 
இவ்வகை விழி ஒட்டுவில்லைகள் பயன்பாட்டில் மேலும் ஒருபடி முன்னேற்றம் ஏற்பட்டு மென்மை தன்மை கொண்ட விழி ஒட்டுவில்லைகள் உற்பத்தி செய்யப்பட்டு வணிக ரீதியாக வெற்றியடைந்தது. குறிப்பிட்ட குறைபாடு கொண்டவர்களுக்கே பரிந்துரைக்கும் நிலைமாறி பலரும் பயன்படுத்தும் நிலை வந்தது. இவ்வகை விழி ஒட்டுவில்லை பத்துமணி நேரம் தினசரி பயன்படுத்தலாம் என ஆனது. மேலும் இதனால் விழி வெண்படல பிரச்னைகள் கொஞ்சம் குறைய வாய்ப்பு ஏற்பட்டது. 
மேற்கண்ட அனைத்து விதமான விழி ஒட்டுவில்லைகளை பயன்படுத்து முன், பரிந்துரை செய்யும் முன் பயன்படுத்த போகிறவர்களின் கண்களை பரிசோதித்து குறிப்பாக விழி வெண்படலமானகார்னியாவின் அமைப்பு, அதன் குறுக்கு, ஆரம் அளவு இவைகளை அளந்து அதற்கு தகுந்தாற்போல் பிரத்யேக குறிப்பிட்ட அளவுகள் பொருந்திய விழி ஒட்டுவில்லை தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது .
இதில் ஏற்பட்ட குறைபாடுகளை களைந்து எளிதில் அனைவருக்கும் பொருந்தும்படியான விழி ஒட்டுவில்லைகளையும், வருடம், மாதம், தினசரி (டிஸ்போஸபில்) என வாழ்நாள் வரக்கூடிய வகையில் விழி ஒட்டுவில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 
இவ்வகை விழி ஒட்டுவில்லைகள் பயன்படுத்த எளிதாகவும், பொருளாதார ரீதியாக, வணிக ரீதியாக, பக்க விளைவுகள் குறைந்த, 15 மணி நேரம் கூட பயன்படுத்தக் கூடிய வகையில் பல்வேறு விலைகளில், பல்வேறு வகைகளில் சந்தைக்கு வந்துள்ளன. இருப்பினும் மருத்துவர்கள் மற்றும் விழி ஒளி பரிசோதனை நிபுணர்கள் மேற்பார்வையில் அவற்றை வாங்குவதும், அணிவதும் நலம் பயக்கும். 
விழி ஒட்டுவில்லை வரலாற்றில் வண்ண விழி ஒட்டுவில்லையின் பங்கு மிக முக்கியமானது . திறன் கண்ணாடிகளும், திறனற்ற அதாவது பார்வைக் குறைபாடு இல்லாதவர்களும் பயன்படுத்தும் வண்ண விழி ஒட்டுவில்லை முக அழகிற்கு மெருகு சேர்ப்பதுடன், கண்ணாடி அணிய தயங்கியவர்களுக்கு ஓர் மாற்று வரப்பிரசாதமாக உள்ளது. ஒரு வண்ண, இருவண்ணக் கலவை, மூவர்ணக் கலவை கொண்ட விழி ஒட்டுவில்லைகள் பார்ப்பதற்கு உண்மையான கருவிழி வெண்படலமாய் காட்சி தருவதால் விழி ஒட்டுவில்லை போடுவோருக்கும் அழகிற்கு மெருகூட்டும் வண்ண விழி ஒட்டுவில்லையை தேர்ந்தெடுக்கின்றனர்.
விழி ஒட்டுவில்லை போடுவோர் கவனத்திற்கு. 
உங்கள் கண்களை முறைப்படி வருடம் ஒருமுறையேனும் கண் மருத்துவரிடமோ பார்வை பரிசோதனை நிபுணர்களிடமோ பரிசோதித்துக் கொள்ள வேண்டும். விழி ஒட்டுவில்லையை பயன்படுத்தும் வழிமுறைகளை கையாள வேண்டும். விழி ஒட்டுவில்லையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தானே மருத்துவம் பார்த்துக் கொள்ளக் கூடாது ஒவ்வொருவரின் தேவைகளை, பயன்பாட்டினை பொருளாதா வசதியை, கண் அமைப்பினை, செயல்பாட்டினை கருவிழி வெண்படல தன்மையை அறிந்து, அதற்கேற்றவாறு வாங்கி பயிற்சி எடுத்தபின், அணிந்து பயன்படுத்துதல் நலம்.  

தொடர்புக்கு : +919381051009

Comments

Popular posts from this blog

வெள்ளெழுத்து ஏன்?

கண் பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?

வியப்பூட்டும் லேசர் சிகிச்சை