வெள்ளெழுத்து ஏன்?

வெள்ளெழுத்து ஏன்?

கண்களின் விழி ஊடக வில்லையை மீட்சிவிசை கொண்ட தசைநார் போன்ற ஓர் அமைப்பு சிலியரிபாடி என்ற அமைப்புடன் இணைத்து உள்ளது. நாம் பார்க்கும் தூரத்திற்கு தகுந்தாற்போல் நமது கண்ணின் தகவமைப்புத்திறன் இந்த மீட்சிவிசை தசைநார் மூலம், கண்ணின் விழி ஊடக வில்லையின் குவியத்தூரத்தை மாற்றி எந்த தூரத்தில் உள்ளவற்றையும் பார்க்கும், குவியத்திறன் மாற்றம் தானியங்கி குவியத்தன்மையை பெறுகிறது


ஆனால், தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு 36 வயதிற்கு பிறகும், சராசரி நல்லப் பார்வைத்திறன் கொண்டவர்களுக்கு 40 வயதிலும் இந்த குவியத்திறன் மாற்றத் தன்மையின் குறைபாடு காரணமாக மிக அருகில் உள்ளவைகளை சரிவர படிக்க இயலாத தன்மை ஏற்படுகிறது. இதை வெள்ளெழுத்து () சாளேஸ்வரம் எனக் கூறுவர். இவர்களின் குவியத்திறன் மாற்ற திறன் தன்மையை ஆராய்ந்து தகுந்த குவி ஊடக வில்லை கொண்ட கண் கண்ணாடியை பரிந்துரை செய்வதன் மூலம் அவர்களின் பார்வைத் திறனை அதிகரித்து பயன் பெறச் செய்யலாம்

மேலும், மக்களுக்கு அவரவர் வேலையின் தன்மைகளை பொருத்தும் குவியத்திறனை விழிஒளி பரிசோதகர்கள் சோதித்து தகுந்த கண்ணாடியை பரிந்துரை செய்வர். கணிணி வேலை செய்வோருக்கும், புத்தக எழுத்தர், கடிகாரம் பழுது பார்ப்பவர், நகை வேலை செய்வோர், துணி நெய்வோர் என பல்வேறு பணியில் உள்ளவர்களின் பணியின் தன்மை, கண்ணிற்கும் பொருளுக்கும் உள்ள தூரம், பணியிடத்தின் வெளிச்சம் பணியின் வேகம் பணியின் தரத்தின் அத்தியாவசியம் பணியில் கூர்ந்து பார்க்க வேண்டிய, கூர்ந்து செய்ய வேண்டிய தரத்தின் துல்லியமான அளவுகள் இவைகள் மனிதருக்கு மனிதர் மாறுபடக் கூடியது ஆகும். எனவே அனைவருக்கும் ஒரே மாதிரியான புத்தக கோட்பாடுகளோ விதிமுறைகளோ, பரிந்துரைக்கும் அளவுகளோ பயன் தராது. அப்படியே பயனளித்தாலும் மன நிறைவுத் தன்மையோ அல்லது முழுமையான பயன்பாட்டு தன்மையையோ தர இயலாது எனவே சம்பந்தப்பட்டவர்களின் தேவையை உணர்ந்து - பணியிடம், இடத்தின் ஒளி, பொருள்,  பொருளின் அளவு, பார்க்க ( ) வேலை செய்ய பொருள் தூரம் போன்றவைகளை ஆராய்ந்து எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் விதமாக கண் கண்ணாடியை பரிந்துரை செய்வது மிக நன்று.

கிட்டப் பார்வை, தூரப்பார்வை ஒருதள அச்சுப் பார்வை, வெள்ளெழுத்து என எவ்விதமான பார்வை கோளாறு உடையவர்களாக இருப்பினும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் முறையாக கண் மருத்துவர்கள் (அ) விழி ஒளி பரிசோதகர்களிடம் கண் பார்வை பரிசோதனை செய்து அவர்கள் பரிந்துரைக்கும் கண் கண்ணாடி அல்லது வழி ஒட்டுவில்லை () பார்வைத் திறன் மேம்பாட்டு சிகிச்சை செய்து துல்லியமான பார்வையை பெறுவதன் மூலமாக அனைவரும் எல்லா காட்சிகளையும் கண்டு, வேலையிலும் படைப்புத் திறனை அதிகரித்து மன நிறைவுடன் எவ்விதமான பக்க பாதிப்புகளும் இல்லாமல் வாழலாம்.

 

Comments

Popular posts from this blog

கண் பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?

வியப்பூட்டும் லேசர் சிகிச்சை